என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகதிகள் முகாம்"
- யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
- இந்த தாக்குதலில் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும்.
- அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.
- கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பிறேமராஜ் ரவிஷாந்தர் (வயது 54). இவர் இலங்கை அகதிகள் முகாமில் தலைவராக இருந்து வருவதோடு, அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளை கள்அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் முகமது சாதிக். இவரது மகள் சல்மியா பானு (வயது 26). இவரும் மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் (28) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சல்மியா பானுவை தனக்கு பதிவு திருமணம் செய்து தருமாறு காசி விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். பெரியவர்களிடம் பேசிவிட்டு பின்னர் சொல்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சல்மியா பானுவிடம் செல்போனில் பேசி வீட்டை விட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன், சல்மியா பானு வீட்டிற்கு நேரில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மியா பானுவின் முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டினார். தடுக்க வந்த முகமது சாதிக் மற்றும் அவர் மனைவியை கல்தூணில் பிடித்து தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளை பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த சல்மியா பானு மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேஸ்வரனை தேடி வருகின்றனர். வீடு புகுந்து இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கினார்
- தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஞாறான்விளை அகதிகள் முகாமில் வசிப்பவர் தர்மகுணசிங்கம் (வயது 59) தொழிலாளி. இவருக்கு மேரி அஜந்தா என்ற மனைவியும் குழந்கதைளும் உண்டு.
இன்று அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது மனைவி மேரி அஜந்தா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் முகாமில் உள்ள உறவி னர்களிடம் போலீசார் தர்மகுணசிங்கம் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அகதிகள் முகாமில் தொழிலாளி தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது.
- விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து தோட்டனூத்தில் முகாம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி 321 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது 210 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மற்ற வீடுகள் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் செஞ்சிமஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இப்பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் வாழ் தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.
தமிழக மாணவர்கள் இனி எக்காலத்திலும் வெளிநாடுகளில் சென்று படிக்கின்ற நிலையை உருவாக்காத வகையில் முதல்-அமைச்சர் செயலாற்றி வருகிறார். உக்ரைனில் இருந்து மருத்துவம் மற்றும் இன்னும் பிற படிப்புகளுக்காக சென்று பாதியில் படிப்பை தொடரமுடியாமல் திரும்பியவர்களுக்கு தடையின்றி கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே கல்வியை தொடர முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை நாங்கள் இங்கு வருமாறு அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் இங்கு வருகின்றனர். தமிழக பாரம்பரிய எண்ணத்தின் அடிப்படையில் தாயுள்ளத்தோடு அவர்களை வரவேற்று பாதுகாத்து வருகிறோம். மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலை மனதில் கொண்டு அங்குள்ள மக்களுக்கும் முதல்-அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஏற்கனவே நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் 2-ம் கட்டமாக ரூ.123 கோடி மதிப்பில் அரிசி, பால்பவுடர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வக்புவாரிய சொத்துக்கள் சுமார் 500 கோடி மதிப்பீட்டில் 11 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அந்த இடத்தை ஒப்படைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தனர்.
அவர்கள் அருகில் சென்ற கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது அவர்கள், முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள், இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் என்பது என்பது தெரியவந்ததுய இவர்கள் மதுரை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்துள்ளதும் தெரியவந்தது.
இவர்கள் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து அதற்காக ஏஜெண்டுகள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ள படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தபோது கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்